விடிகாலையில் கேட்ட முனகல் சத்தம்.. மனைவியை இளைஞருடன் சேர்த்து பார்த்துவிட்டார் கட்டிய கணவன்..
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளத்தில் வசித்து வந்தவர் நீலாவதி.. 42 வயதாகிறது.. கணவர் பெயர் ராமதாஸ்.. 19 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.. ஆனால் 3 வருஷத்துக்கு முன்பே ராமதாஸை இவர் பிரிந்துவிட்டார்
ஒரு வீடு
தனியாக ஒரு வீடு எடுத்து மகனுடன் வசித்து வந்தார்... இந்த நிலையில் நீலாவதி வீட்டில் சடலமாக கிடந்தார்.. அவரது உடம்பெல்லாம் காயங்கள் கிடந்தன.. இந்த விஷயம் போலீசுக்கு போனது.. விரைந்து வந்த அவர்கள் நீலாவதி சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்... ஆனால் வீட்டில் ஒருத்தரையும் காணோம்.
லைட் மட்டும் எரிந்து கொண்டிருந்தது
அம்மா லைட் மட்டும் எரிந்து கொண்டிருந்தது.. அதேவீட்டில் இருந்த மகனைகூட காணோம்.. இதனால் போலீசாருக்கு சந்தேகம் அதிகமாகவும், அவரை பிடித்து விசாரித்தனர்.. அதற்கு அவர், அம்மாவை கொன்றபோது நான் வீட்டிலேயே இல்லை.. எனக்கு என் அப்பா மேலதான் டவுட் ஆக இருக்கு என்றார்.. இதையடுத்து, ராமதாஸை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போதுதான் அந்த பகீர் விஷயத்தை அவர் கூறினார்.
இளைஞர் 3 வருஷத்துக்கு முன்னாடி நீலாவதிக்கு ஒரு இளைஞருடன் தொடர்பு இருந்தது.. அந்த இளைஞர் அதே பகுதியை சேர்ந்தவர்தான்.. இதை ஒருநாள் நான் நேரில் பார்த்துட்டேன்.. கண்டிச்சேன்.. ஆனால் அவ கேக்கல.. அதனால குடும்பம் நடத்த பிடிக்காம, நான் பிரிஞ்சு தனியா போயிட்டேன்... அவமேல இருக்கிற கோபத்துல தனியா வாழ்ந்து வந்தாலும், டைவர்ஸ் செய்யல.
விடிகாலை என் மகன்கிட்டயும் என்னை பத்தி தப்பு தப்பா சொல்லி, என்கிட்ட இருந்து பிரிச்சு கொண்டு போயிட்டாள்.. நேற்று முன்தினம் விடிகாலை நான் மரக்கடைக்கு போய்ட்டு இருந்தேன்.. அப்போதான் நீலாவதி வீட்டை கடந்து செல்லும்போது முனகல், பேச்சு சத்தம் கேட்டது.. பெட்ரூமில் லைட் எரிந்து கொண்டிருந்தது.. அதனால வீட்டுக்குள் போய் பார்த்தேன்.
நீலாவதி
நீலாவதியும் அந்த இளைஞரும் ஜாலியாக இருப்பதை கண்ணெதிரே பார்த்துட்டேன்.. ஏற்கனவே இப்படி பார்த்துதான் நான் குடும்பத்தை பிரிந்து போய்ட்டேன்.. இப்பவும் அதை பார்க்கவும் ஆத்திரம் வந்தது.. அதனால 2 பேரையும் சரமாரியாக அடிச்சேன்.. அதுக்குள்ள அந்த இளைஞர் தப்பிச்சு ஓடிட்டான்.. ஆவேசத்தில் மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டேன்.
Comments
Post a Comment